வடக்கு - கிழக்கில் மழையுடனான காலநிலை குறித்து வெளியான அறிவிப்பு
இன்று முதல் எதிர்வரும் 15.10.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இடையிடையே மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வெப்பச் சலன செயற்பாட்டினால் உருவாகும் இம்மழை இடி மின்னலுடன் இணைந்த மழையாக இருக்கும். இக்காலப்பகுதியில் பரவலாக அனைத்துப் பிரதேசங்களும் மழையைப் பெறும்.
ஆனால் ஒரே நாளில் அனைத்துப் பிரதேசங்களும் மழையைப் பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் இம்மழை கனமழையாகவும் கிடைக்கக்கூடும்.
2025/2026 காலபோக நெற் செய்கையில் புழுதி விதைப்பை மேற்கொண்டவர்களுக்கும் மேற்கொள்ள இருப்பவர்களுக்கும் இம்மழை பயனுள்ளதாக அமையும்.
வடகீழ்ப் பருவக்காற்று
ஏற்கனவே குறிப்பிட்டவாறு இவ்வருட வடகீழ்ப் பருவக்காற்று மழை ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி அளவில் ஆரம்பமாகும். இவ்வாண்டின் வடகீழ்ப் பருவக்காற்றின் உடைவு தாழமுக்கத்தோடு ஆரம்பமாகும்.

இதனால் ஒக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதி வரை 05 தாழமுக்க நிகழ்வுகள் வங்காள விரிகுடாவில் தோன்றும் வாய்ப்புள்ளது.
இதில் இரண்டு தாழமுக்கங்கள் புயலாகவும் மாற்றமடையும் வாய்ப்புள்ளது. இதனால் நவம்பர் மாதத்தின் 20ம் திகதி முதல் டிசம்பர் மாதத்தின் 15 ம் திகதி வரை செறிவான மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஆகவே இவ்வாண்டின் காலபோக நெற் செய்கையின் சேற்று விதைப்பை மேற்கொள்ளும் விவசாயிகள் அதற்கேற்ற வகையில் திட்டமிட்டு மேற்கொள்வது செறிவான கனமழை மூலம் நெற்பயிர்கள் பாதிப்படைவதைத் தவிர்க்கும்.
விவசாயிகள் இது தொடர்பாக நெற்செய்கையோடு தொடர்புடைய அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று செயற்படுவது சிறந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri