தேவேந்திரமுனையில் இன்று நேரடி உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இன்றைய தினத்திற்கான இலங்கையின் வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் குறிப்பாக மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஏனைய இடங்களில் இயல்பான வானிலை நிலவும். மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவு, வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதேவேளை இன்று இலங்கையின் தேவேந்திரமுனையில் பகல் 12.08க்கு சூரியனின் நேரடி உச்சம் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.