நாளைய தினம் வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் கடும் வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.
மேல் மாகாணத்தின் கடலோரப் பகுதிகளிலும் காலையில் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழைக்காலங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆய்வு மையம் பொது மக்களை வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் நிகழ்வு நாளை வரை நிகழும் நிலையில் இன்று மல்லாவி, வன்னிவிலாங்குளம், இடைக்காடு போன்ற இடங்களில் சூரியனின் நேரடி உச்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் முதல் மாத்தறை வரை கொழும்பு மற்றும் காலி வழியான கடல் பகுதியில் மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
காங்கேசன்துறை முதல் காலி வரை திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை
வழியான கடல் பகுதிகளில் காற்று வீசும் என்றும் வானிலை மையம்
எதிர்வு கூறியிருக்கிறது.