மன்னாரில் சீரற்ற காலநிலை: சாந்திபுரம் கிராமத்தில் இடி - மின்னல் தாக்கம்
மன்னார் - சாந்திபுரம் கிராமத்தில் இடி, மின்னல் தாக்கத்தினால் 5 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், 5 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (25.10.2026) நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், கூரையின் பகுதிகள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளன.

மின்சார உபகரணங்கள் செயலிழப்பு
மேலும், வீடுகளில் இருந்த மின்சார உபகரணங்களும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் குறித்த குடும்பங்களின் வீடுகள் மற்றும் உடைமைகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள் மற்றும் சாந்திபுரம் கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டுள்ளனர்.
நள்ளிரவில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.


அர்னாப் மிகத் தீவிர சூறாவளியாக மாறும் வாய்ப்பு..! அடுத்தடுத்த அறிவிப்புகள் தொடர்பில் அவசர அறிவுறுத்தல்
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam