நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை - வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினத்திற்கான (16.06.2026) வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.
மழை
அதேநேரம், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ள அபாயம்
இதேவேளை, களு, நில்வலா உள்ளிட்ட பிரதான ஆறுகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, முன்னதாக வெள்ள அபாயம் விடுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஆறுகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.