காலநிலையில் ஏற்படும் மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
சப்ரகமுவ மாகாணம், களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லி மீட்டர்களில் அதிகபட்சம் சாத்தியமாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
