வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு ‘சிவப்பு’ வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்கு கரையோரத்தை நோக்கி நகரக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை
இதன் காரணமாகக் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடுமையான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வீசக்கூடும்.
மேலும் குறித்த கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும், கடலலைகள் உயர்வாகவும் காணப்படுவதுடன் குறித்த பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
