பாடசாலை வளாகத்தில் ஆயுதங்கள் - விசேட தேடுதல் நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய வளாகத்தில் ஆயுதங்கள் இருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தின் அனுமதியுடன் பாடசாலை வளாகத்தினுள் கனரக ஜேசிபி வாகனம் உதவியுடன் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.
வெல்லாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய வளாகத்தினுள் வெல்லாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி ஆனந்த சிறியின் தலைமையில் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த தேடுதல் வேட்டையினை மேற்கொண்டுள்ளனர்.
ஜேசீபி வாகன மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதலின்போது எந்தவிதமான ஆயுதங்களும் மீட்கப்படாத நிலையில் தற்காலிகமாகத் தேடுதல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.









