தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க தயங்கப் போவதில்லை – லால்காந்த
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க தயங்கப் போவதில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் இருப்பதனை விடவும் ஆளும் கட்சியில் இருப்பது சுலபமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியில் இருப்பது சுலபமானது
அரசியல் எதிரிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கப் போவதில்லை எனவும் உரிய நேரத்தில் பதில் தாக்குதல் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியில் இருப்பதனை விடவும் எதிர்க்கட்சியில் இருப்பது சுலபமானது என வெளியாகும் கருத்துக்களை தாம் நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
1965ம் ஆண்டு முதல் தமது கட்சி எதிர்க்கட்சியில் மிகவும் கடினமான பயணத்தை மேற்கொண்டது எனவும் துரோகிகளினால் தங்களது சகாக்கள் படுகொலை செய்யப்பட்ட சூழ்நிலைகளில் முன்னெடுத்த அரசியலை விடவும் ஆளும் கட்சியில் அரசியல் செய்வது எளிதானது என தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விமர்சனங்களின் போது சில சந்தர்ப்பங்களில் அமைதி காத்தாலும் உரிய நேரத்தில் பதில் தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
பதில் தாக்குதல்
அவ்வாறு தாக்குதல் நடத்தும் போது எதிரில் இருப்பர்கள் காவி உடை அணிந்தவர்களா, கோட் சூட் அணிந்தவரா அல்லது தேசிய உடை அணிந்தவரா என்பது குறித்து கரிசனை கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் செய்ய வருவதனால் அந்த ஆடைகளை களைந்து விட்டு வரவேண்டும் எனவும் எதை அணிந்திருந்தாலும் பதில் தாக்குதல் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி அதிகாரம் கிடைக்கப் பெற்றுள்ள போதிலும் அரச அதிகாரத்தையும் பெற்றுக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan