மக்கள் நம்பிக்கையை பேணும் பொலிஸ் சேவை உருவாக்கப்படும்: பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு
மக்கள் நம்பிக்கையை பேணக்கூடிய வகையில் பொலிஸ் சேவை உருவாக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உறுதி மொழியை வழங்கியுள்ளார்.
பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 160 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் ஊடகங்களுக்கு அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்டதை போன்று இந்த ஆண்டிலும் தொடர்ச்சியாக போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகள்
திட்டமிட்ட குற்ற செயல்களைப் போன்று பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் சிறு முறைப்பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தி தீர்வுகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் நம்பக்கூடிய ஒரு பொலிஸ் சேவையை நாம் உருவாக்க வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு காணப்படக்கூடிய சம்பளப் பிரச்சனை உட்கட்டுமான பிரச்சினை போன்றவற்றிற்கு அரசாங்கம் சாதகமான பதில்களை வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை
எதிர்வரும் காலங்களில் பொதுமக்கள் உணரக்கூடிய வகையில் சிறந்த சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 160 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு மத வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பௌத்த மத வழிபாடுகள் நடைபெற்றதாகவும் ஏனைய மத வழிபாட்டு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பொலிஸ் அதிபர் பிரியந்த விரசூரிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18