உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசு தயார்
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு அரசாங்கம் தயார் என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பின் ஒப்புதல் அவசியமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அளவிலான எந்தவொரு மாற்றத்தையும் முன்மொழியப்பட்ட திருத்தத்தில் அரசாங்கம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வஜன வாக்கெடுப்பு அவசியப்படாது என்றே நாங்கள் நம்புகிறோம்.
எனினும், வாக்கெடுப்பு தேவை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதை நடத்த நாங்கள் தயராக இருக்கிறோம் என அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானம் குறித்த முடிவு இன்னும் மூன்று வாரங்களுக்குள் தெரியவரும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 23 மணி நேரம் முன்
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam