எந்தவொரு உதவியையும் வழங்க நாங்கள் தயார்! இலங்கை தொடர்பில் இந்தியாவின் முக்கிய அறிவித்தல்
இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களுக்கு இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றது என இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இதனை தெரிவித்தார்.
இலங்கைக்கு உதவுவோம்...
இவ்வருடம் மட்டும் இந்தியா 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
தாய்லாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ‘இந்தோ - பசிபிக் பற்றிய இந்தியாவின் பார்வை’ என்ற தலைப்பில் நேற்று விரிவுரை ஆற்றியிருந்தார்.
இதன்போது தொடர்ச்சியான கேள்விகளுக்குச் ஜெய்சங்கர் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை ஐஎம்எப் உடன் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் எந்தவொரு உதவியையும் இலங்கை வழங்க தயாராக உள்ளது. இயல்பாகவே நாங்கள் அதனைச் செய்வோம் எனவும் அவர் கூறினார்.