புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை வரவேற்கிறோம் : ஆளுநர் சார்ள்ஸ்
புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை தாம் வரவேற்பதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகர் அன்ரேவ் ட்ராவெள்ளர் (Andrew Traveller), வடக்கு மாகாண ஆளுநரை இன்று (21.03.2024) ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
முதலீடுகள்
வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகர் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது மாகாணத்தின் கல்வி, பொருளாதார, வாழ்வியல்நிலை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பிலும் முதலீட்டு வலயங்களை ஸ்தாபித்தல் தொடர்பிலும் ஆளுநரால் தெளிவுப்படுத்தப்பட்டது.
அத்துடன், புலம்பெயர் தேசத்து உறவுகளின் முதலீடுகளை வரவேற்பதாகவும் வடக்கு மாகாண ஆளுநர், இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |