விசாரணைகள் நடத்தப்படுவதனை வரவேற்கும் நாமல்
குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அழைக்கும் எந்த ஒரு நேரத்திலும் முன்னிலையாகி விசாரணைகளுக்கு ஆதரவு வழங்க தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அச்சுறுத்தல்கள் மூலம் அல்லது அழுத்தங்கள் பிரயோகிப்பதன் மூலம் விசாரணை பயணத்தை முன்னெடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்பதற்கான சிறந்த வழிமுறை விசாரணை நடத்தப்படுவது ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதனை வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த விசாரணைகள், பலவந்தமான அடிப்படையில் கட்டாயப்படுத்தி வாக்குமூலங்களை பதிவு செய்து கொள்ளும் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடத்தப்பட்டால் அதன் ஊடாக யாருக்கும் நியாயம் கிடைக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
இறுதியாக இதன் மூலம் ஏற்படக்கூடிய நட்டத்திற்கும், பொதுமக்களே பொறுப்பு சொல்ல நேரிடும் எனவும் பொது மக்களை ஏமாற்றும் நோக்கில் இவ்வாறு செய்யப்படுகின்றது எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
you may like this