ஊழல் - போதைப் பொருட்களுக்கு எதிராக அரசாங்கத்திற்கு ஆதரவு! சிறீநாத் எம்பி
ஊழலுக்கு எதிரான போராட்டம், மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டம், வன்முறையற்ற நிகழ்வுகளுக்கும் எங்களுடைய ஆதரவுகளை அரசாங்கத்திற்கு வழங்கி வருகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், " கோட்டைக்கல்லாறு விளையாட்டு மைதானம் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும்.
இது தொடர்பில் எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கதைத்துள்ளேன். அதற்கு அவர்கள் ஒத்திசைவான பதில்களைத் தந்துள்ளார்கள்.
அபிவிருத்தி நடவடிக்கைகள்
எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்த விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை விளையாட்டு அமைச்சினூடாகவும் எடுப்போம்.
விளையாட்டுத் துறைகள் எல்லாம் மாகாணசபைகள் ஊடாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலே பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஊழலுக்கு எதிரான போராட்டம், மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டம், வன்முறையற்ற நிகழ்வுகளுக்கும் எங்களுடைய ஆதரவுகளை வழங்கி வருகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.



