தந்தையுடனும் சிறிய தந்தையுடனும் நாமல் பேச வேண்டும் - வழங்கப்பட்டுள்ள அறிவுரை
கைதிகள் விவகாரம் தொடர்பில் தந்தையான மஹிந்த ராஜபக்ச சிறிய தந்தையான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோருடன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பேச வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கைதிகள் நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியமைக்காக நன்றி கூறுவதாக மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை தமிழ், சிங்கள முஸ்லிம் என்ற பிளவின் அடிப்படையில் பேச முடியாது எனவும், முரண்பாடுகளை களைந்து பேச வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பும் போது அதற்கு எதிர்க்கட்சிகள் மீது பயங்கரவாத முலாம் பூசப்படுவதாகக் குறப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக ஆதாரங்கள் எதுவுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து அமைச்சரவையில் பேசி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri