பாதாள உலகக் குழுச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த கால அவகாசம் கோரும் அரசாங்கம்
பாதாள உலகக் குழுச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுமார் ஐம்பது ஆண்டுகளாக பாதாள உலகக் குழு செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அதனை உடனடியாக கட்டுப்படுத்திவிட முடியாது எனவும் வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழுச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டுமென மக்கள் கடந்த 2024ம் ஆண்டு தீர்மானித்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
செயற்பாடுகள் விஸ்தரிப்பு
தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்ததன் மூலம் இந்த தீர்மானத்தை மக்கள் எடுத்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டுபாயிலிருந்து பாதாள உலகக் குழு செயற்பாடுகள் இடம்பெறுமளவிற்கு தற்பொழுது பாதாள உலகக்குழு செயற்பாடுகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிச்சயமாக இந்த பாதாள உலகக்குழு செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டுமெனவும் அதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |