மக்களை நிம்மதியாக வாழ வைப்பதற்குத்தான் நாம் அரசியலை பயன்படுத்த வேண்டும்! - பிள்ளையான்
நிம்மதியாக வாழவேண்டுமென்று எண்ணுகின்ற மக்களை நிம்மதியாக வாழ வைப்பதற்குத்தான் நாம் அரசியலை பயன்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - கள்ளியங்காட்டில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், எமது மக்களுடைய எதிர்பார்ப்பை தேவைகளை அறியாத மாற்று அரசியல் செய்கின்ற சக்திகள் மீண்டும் இந்த மாவட்டத்திலும் இந்த நாட்டிலும் குழப்பங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள், உங்களுக்குத் தெரியும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் என்ன நடந்தது? அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு முன்பிருந்த அமைச்சர் இந்த நாட்டிலே என்ன செய்தார்.
சதொச எங்கெல்லாம் திறக்கப்பட்டது, எங்கே மூடப்பட்டது, சதொச களஞ்சியங்களுக்குள் கூட போதைப்பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இப்படிப்பட்ட சம்பவங்களையெல்லாம் நாங்கள் பார்த்தோம், இவையெல்லாம் வரலாற்றில் மிக மோசமான சம்பவங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இப்படியான சூழலிலே அந்த அரசாங்கத்தைப் பாதுகாத்தவர்கள் இப்பொழுது ஜெனிவாவைப்பற்றிப் பேசுகின்றனர், ஜெனிவாவிலே போய் என்ன நடக்கப்போகின்றது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், இலங்கைக்குள்ளே அரசாங்கமும் நாங்களும் மக்களும் பேசி தீர்மானிக்கவேண்டிய விடயங்களை இன்னமும் பிரசாரத்துக்காக அல்லது வெள்ளைக்காரர்கள் வந்து தீர்த்துவைப்பார்கள் என நாங்கள் சொல்லுவோமாக இருந்தால் மீண்டும் இந்த மக்கள் கஷ்டப்படுவார்கள், துன்பத்தோடும் வலியோடும் தங்களுடைய வாழ்விடங்களில் வாழ்ந்து தற்போது நிம்மதியாக வாழவேண்டுமென்று எண்ணுகின்ற மக்களை நிம்மதியாக வாழ வைப்பதற்குத்தான் அரசியலே தவிர, அந்த மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் உசுப்பேற்றிவிட்டு வாக்குகளை எடுத்துவிட்டு நாடாளுமன்றம் செல்வது எங்களுடைய நோக்கம் அல்ல.
எமது மக்களுடைய வலிகளையும் வேதனையையும் சுமந்த ஒரு அரசியல் பிரமுகராக பிரதிநிதியாக எமது மண்ணை கட்டியெழுப்புவதற்காக நாங்கள் தொடர்ந்தும் பாடுபடுவோம்.
அந்த முயற்சியையும் அரசாங்கத்தின் கொள்கையையும் இந்த மண்ணிலே கொண்டுவந்து சேர்த்து நம்பிக்கையூட்டி மக்களையும் மண்ணையும் வாழ வைப்போம் என அவர் தெரிவித்தார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 14 மணி நேரம் முன்

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
