எரிவாயு வெடிப்பு சம்பவங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் (Video)
எரிவாயு வெடிப்பு சம்பவங்களிலிருந்து பொது மக்களை பாதுகாக்க அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் (Ganapati Kanagaraj) தெரிவித்துள்ளார்.
இன்று தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற எரிவாயு அடுப்பு வெடிப்பு தொடர்பாக இன்று (01) ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மலையகத்தை பொருத்த வரையில் பெரும்பாலான மக்கள் தொடர் குடியிருப்புக்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறான ஒரு சூழ் நிலையில் இவ்வாறு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டால் முழு தொடர் குடியிருப்பினையே அது அழித்து விடும்.
ஆகவே இவ்வாறான சம்பவங்கள் மக்களை அச்சுறுத்துவதாகவே அமைந்துள்ளன.
அது மாத்திரமன்றி இவர்கள் சிறுக சிறுக உழைத்த தமது உடைமைகளும் இல்லாது போய்விடும் இந்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் இம்மக்களினை பாதுகாக்க கூடிய அக்கறை செலுத்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam
வெனிசுலாவின் எண்ணெய் டேங்கரை அமெரிக்கா கைப்பற்றிய பரபரப்பு காட்சிகள்! டிரம்ப் சொன்ன தகவல் News Lankasri