நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்:கீதா குமாரசிங்க
எதிர்பார்க்காத விதத்தில் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி சென்றதாகவும் இதனால், கட்சி என்ற வகையில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்ததாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பின் பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகிறது

நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கண்டு, நாட்டுக்கு சிறந்த எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க முடியுமாக இருக்க வேண்டும்.
சர்வதேச உதவிகளை கூடிய விரைவில் பெற்று. தற்போது ரணில் விக்ரசிங்க புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். சர்வக்கட்சி அரசாங்கம் என்ற வகையில் முன்நோக்கி செல்லும் என நம்புகிறேன்.
மக்களின் கோரியும் இதுதான் என்பதால், மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க வேண்டும். பெட்ரோல, டீசல், சமையல் எரிவாயு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகிறது.
அவை நாட்டை நெருங்கி வந்துக்கொண்டிருக்கின்றன. உரமும் வழங்கப்பட்டு வருகிறது.
எது எப்படி இருந்தாலும் இனிவரும் காலத்தில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் கீதா குமாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam