நாங்கள் கடலில் சுதந்திரமாக தொழில் செய்ய முடியவில்லை: எம்.வி.சுப்பிரமணியம்
சுதந்திர தினம் நாட்டில் கொண்டாடப்படுகின்ற நிலையில் நாங்கள் சுதந்திரமாக கடலில் தொழில் செய்ய முடியவில்லை என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் நேற்று (04.02.2024) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சுதந்திர தினத்தில் கூட இந்திய இழுவைப் படகுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்றொழிலாளர்கள் கைது
மன்னார் வளை குடா, பாக்கு விரிகுடா ஆகிய கடற்பரப்புகளில் சுதந்திரமாக கடற்றொழில் ஈடுபட முடியாத நிலையில் இருக்கிறோம்.
குறிப்பாக கடற்படையினர் ஒன்று, இரண்டுக்கு மேற்பட்ட இழுவை படகுகளை கைப்பற்றுவதில்லை.
அரசாங்கம் இழுவை படகுகளுடன் கடற்றொழிலாளர்களையும் சேர்த்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது கட்சியை விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன்: சஜித் எச்சரிக்கை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam