தமிழ் மக்களுடன் போரிடவில்லை - நாமல்
தமிழ் மக்களுடன் போரிடவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமது ஆட்சி காலத்தில் தமிழீழ விடுதலை புலிகளுடன் போரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் போர் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டமை தொடர்பில் குறைந்தபட்சம் சமூக ஊடகத்தில் பதிவிடவில்லை என தெரிவித்துள்ளார்.

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு 17 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவோ பிரதமர் ஹரிணி அமரசூரியவோ சமூக ஊடகத்தின் மூலமேனும் படை படைவீரர்களுக்கு நன்றி பாராட்ட தவறியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முகநூலிலோ அல்லது எக்ஸ் பதிவு ஒன்றின் மூலமோ போரில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய படையினரை பாராட்டி பதிவிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஒருபுறத்தில் பயங்கரவாத நிகழ்ச்சி நிரலை கொண்ட தரப்பினர் போர் குறித்த நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச படைவீரர் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது துரத்தி அடிக்கப்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri