மக்களுக்கு 4ஜி, 5ஜி தேவை இல்லை அவர்களுக்கு தேவை கஞ்சி - கபீர்
மக்களுக்கு 4ஜி, 5ஜி தேவையில்லை எனவும் அவர்குளுக்கு தேவை கஞ்சி எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனை என்று தெரிவித்துள்ளார்.
இளம் தலைமுறையினருக்கு உதவுவதாக கூறிய இந்த அரசாங்கம் ரிலோட் ஒன்றில் பெருந்தொகையை வரியாக பெற்றுக் கொள்வதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

100 ரூபாய் ரிலோட் போட்டால் 30 ரூபாய் அரசாங்கத்திற்கு நேரடியாக செல்கின்றது என தெரிவித்துள்ளார்.
இன்டர்நெட் பயனர்களிடமும் பெருந்தொகை அறவீடு செய்யப்படுவதாகவும் 100 ரூபா பயன்படுத்தினால் 19 ரூபாவை அரசாங்கம் அதில் பெற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அறவீடு செய்யப்படும் தொகைகளே மூலதன செலவாக செலவிடப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அண்மையில் ஆயிரம் 4 ஜி கோபுரங்களை உருவாக்குவதாக கூறியிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் நாட்டு மக்கள் தற்பொழுது எதிர்பார்ப்பது டிஜிட்டல் தொழில்நுட்பம் கிடையாது எனவும் பிள்ளைகளுக்கு எவ்வாறு உணவளிப்பது என பெற்றோர் திணறுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷீம் தெரிவித்துள்ளார்.
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam