ஆட்சியைக் கவிழ்க்க எம்மால் முடியாது..! ராஜித சுட்டிக்காட்டு
இந்த ஆட்சியைக் கவிழ்க்க எம்மால் முடியாது. அதற்குரிய பணியை மக்கள்தான் முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எதிரணியின் அரசியல் செயற்பாடு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மக்களின் கைகளிலேயே உள்ளது
அவர் மேலும் தெரிவிக்கையில், "ஓர் அரசின் நிலைத்தன்மையும் நீடித்த ஆட்சியும் உண்மையில் மக்களிடமே உள்ளது. அதாவது அரசின் ஆயுள் என்பது மக்களின் கைகளிலேயே உள்ளது.

அரசின் ஆயுள் காலம் ஐந்து எனக் கூறப்பட்டாலும் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியை அதற்கு முன்னரே மக்கள் கவிழ்த்தார்கள்.
எனவே, அரசின் ஆயுள் என்பது மக்களின் கைகளிலேயே உள்ளது. நாடு முன்னால் உள்ள சவால்களை தேசிய மக்கள் சக்தி அரசு எதிர்கொண்டால் நல்லது. ஆனால் அதற்குரிய சாத்தியம் உள்ளதா என்பது சந்தேகமே" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam