கல்வியின் மூலமாகத்தான் நாம் விடுதலை பெற வேண்டும் - அரியநேத்திரன்
கல்வி தான் எம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். கல்வியின் மூலமாகத்தான் நாம் விடுதலை பெற வேண்டும். நாம் அனைவரும் தமிழர்களாக இருக்க வேண்டும்.அதற்காக தமிழ் தேசியத்திற்கு பின்னால் அனைவரும் இருக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியத்தை நாம் அனைவரும் வளர்க்க வேண்டும். தமிழ் தேசியக் கட்சியில் இருக்கின்ற உறுதியானவர்களை நாங்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட விவேகானந்தபுரம் கிராமத்தில் நேற்று (03.03.2026) நடைபெற்ற அகிலன் பவுண்டேசன் நிறுவனத்தினால் அக்கிராம மக்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாணவர்களின் ஒழுக்கம்
அவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்களின் ஒழுக்கம் என்பது பெற்றோர்களில்தான் தங்கி இருக்கின்றது. பாடசாலைகளில் மாணவர்கள் குறைந்து ஆறு மணித்தியாலம்தான் பாடசாலையில் இருக்கின்றார்கள். ஏனைய மிகுதியாக உள்ள நேரம் அனைத்தும் பெற்றோர்களுடன் அல்லது வீட்டில்தான் மாணவர்கள் செலவிடுகின்றார்கள்.

எனவே கல்வி என்பதை ஒரு கருத்தாக எடுத்து எமது மாணவர்களை ஒழுக்க சீலர்களான கல்வியில் கற்பிக்க வேண்டும். கல்விதான் எம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். கல்வியின் மூலமாகத்தான் நாம் விடுதலை பெற வேண்டும். நாம் அனைவரும் தமிழர்களாக இருக்க வேண்டும்.
அதற்காக தமிழ் தேசியத்திற்கு பின்னால் அனைவரும் இருக்க வேண்டும். தமிழ் தேசியத்தை நாம் அனைவரும் வளர்க்க வேண்டும்.
தமிழ் தேசியக் கட்சி
தமிழ் தேசியக் கட்சியில் இருக்கின்ற உறுதியானவர்களை நாங்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும். அவர்களை ஒரு பலமான சக்தியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

தமிழ் தேசியத்தின் குரலாக அவர்களை மிளிரச் செய்ய வேண்டும். அதனை நாம் பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறான விடயங்களையும் நாங்கள் திசை மாறாமல் கருத்தில் கொள்ள வேண்டும். எங்கள் இனத்திற்காக நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam