நிலக்கரி இறக்குமதி செய்த நிறுவனத்தை அரசாங்கம் பாதுகாக்கின்றது
சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி சம்பவத்துடன் தொடர்புடைய நிறுவனத்தை அரசாங்கம் பாதுகாத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மெய்யான திருடர்களை பிடிக்கின்றார்களா என்பதை அவதானித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகள் தொடர்பில் கரிசனை கொள்ளாத அரசாங்கம், நிலக்கரியை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு பெரிய நட்டம் ஏற்படும் என்பதில் கூடுதல் கரிசனை காட்டுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எங்களைத் திருடர்கள் எனக் கூறிக்கொண்டு மத்திய வங்கி, நிலக்கரி இறக்குமதி மற்றும் கொள்கலன் இறக்குமதி போன்ற பல விவகாரங்களில் கொள்ளை அடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்களை பார்த்துக் கொண்டிருக்கும் அதேவேளை, குற்ற செயல்களில் தொடர்புடையவர்கள் இந்த நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தும் நடவடிக்கையை எதிர்காலத்தில் மேற்கொள்ள உள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.