சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார்
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்மானித்தால், அதனை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை அரசாங்கம் மதித்து செயற்படும் எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் செப்டெம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் குறிப்பிட்டார்.
மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என மேலும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என தீர்மானிக்கப்பட்டால், அதற்கேற்ப செயற்படுவதற்கு நாம் தயாராக உள்ளோம் எனவும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்மானித்தால், அதற்கும் நாம் தயாராக உள்ளோம் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan