வாக்குறுதிகளில் எமக்கு திருப்தி இல்லை! செவிலியர்கள் சங்கம்
வாக்குறுதிகளில் மட்டும் தங்களுக்கு திருப்தி இல்லை என்று செவிலியர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் பதவி உயர்வு மற்றும் பணியாளர்களின் நிலை தொடர்பான இரண்டு அமைச்சரவை பத்திரங்கள் எதிர்வரும் திங்களன்று அங்கீகரிக்கப்படாவிட்டால், ஜூலை 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை, நாடு முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக அந்த சங்கங்கள் எச்சரித்துள்ளன.
செவிலியர்களின் குறைகளில் ஜனாதிபதியின் தலையீடு சாதகமானது என்றும் அவர்கள் அதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அரச செவிலியர் அதிகாரிகள் சங்கத் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தமது பெரும்பாலான கோரிக்கைகளை அடுத்த பாதீடு வரை ஒத்திவைப்பதில் தாம் திருப்தியடையவில்லை என்று அவர் கூறினார்.
எனவே பதவி உயர்வு மற்றும் பணியாளர்களின் நிலை தொடர்பான இரண்டு அமைச்சரவை பத்திரங்களை எதிர்வரும் திங்கட்கிழமையன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்து புதன்கிழமைக்குள் சுற்றறிக்கையில் வெளியிட வேண்டும்.
வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதிகள் என்ற வரலாறு தம்மிடம் உள்ளது. எனவே இரண்டு அமைச்சரவை பத்திரங்களும் எதிர்வரும் திங்களன்று அங்கீகரிக்கப்படாவிட்டால், 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்லப்போவதாக சமன் ரத்னபிரிய எச்சரித்துள்ளார்.





டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri
