கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழி: அளிக்கப்பட்ட விளக்கம்
வடக்கு கடற்பகுதியில் சட்டவிரோத தொழில்களை உடனடியாக தடுத்து நிறுத்துவன் ஊடாகவே எமது கடல் வளத்தையும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என வடக்கு மாகாண கடற்றொழில் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (06.11.2025) நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த உள்ளூர் கடற்றொழிலாளர்களுக்கு தொழில் அனுமதிகளை வழங்குவதன் மூலமே எமது கடல் வளங்களும் கரையோர பகுதி நிலங்களையும் பாதுகாக்க முடியும்.
தொழில் அனுமதி
வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தயவு செய்து அனுமதி வழங்க வேண்டாம். தொழில் அனுமதி என்ற போர்வையில் எமது நிலங்கள் பறிக்கப்படுகின்றன.

இவ்வாறான செயற்பாட்டிற்கு முல்லைத்தீவு, யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு பொறுப்பான நீரியல் வளத்துறை உதவி பணிப்பாளர்கள் உடந்தையாக செயற்பட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam