கடும் வறட்சி - வனவிலங்குகளுக்கு பௌவுசர்கள் மூலம் நீர் விநியோகம்
வனவிலங்குகளுக்கு பௌசர்கள் மூலம் நீரைக் கொண்டு சென்று விநியோகிக்கும் விசேட திட்டத்தை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
நாட்டில் நிலவிவரும் கடும் வறட்சியான வானிலையால் தேசிய பூங்காக்களிலுள்ள நீர்நிலைகள் வற்றி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சியால் கடுமையான பாதிப்பு
யால, வில்பத்து, குமண மற்றும் புந்தல ஆகிய தேசிய பூங்காக்களில் உள்ள குளம் மற்றும் நீர்நிலைகள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரதான தேசிய பூங்காக்களில் சூரிய சக்தியால் இயங்கும் நீர் மற்றும் குழாய் அமைப்புகள் மூலம் தொடர்ந்து நீர் நிலைகளுக்கு நீர் நிரப்பப்பட்டு வருகிறது.

பௌசர்கள் மூலம் கொண்டு செல்லப்படும் நீர்
குழாய் அமைப்புகள் சென்றடைய முடியாத பகுதிகளுக்குப் பௌசர்கள் மூலம் நேரடியாக நீர் கொண்டு செல்லப்பட்டு விலங்குகளின் தாகம் தீர்க்கப்பட்டு வருகிறது.
வானிலை மாற்றத்திற்கு ஏற்ப நீர் விநியோகத்தின் அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.