ரஷ்ய படைகளால் பெரும் நெருக்கடியில் உக்ரைன்: நிறுத்தப்பட்டுள்ள சேவைகள்
உக்ரைன் தலைநகர் கீவ்வின் பல பகுதிகளில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலை இன்று அதிகாலை நடத்தியுள்ளது.
முன்னதாக ட்ரோன்கள், ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதனால் உக்ரைனின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தாக்குதலில் நகரின் உள்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன் குடிநீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.
மெட்ரோ சேவைகள் நிறுத்தம்
மேலும் மெட்ரோ சேவைகள் அங்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய படைகளின் தொடர் தாக்குதலால் கீவ்வின் பல மத்திய மாவட்டங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது என மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரயில் நிலையங்கள் வெடிகுண்டு முகாம்களாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.