நீர் மின்னுற்பத்திக்கான போதுமான நீர் உள்ளதா..! தீர்மானங்கள் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்
எதிர்கால மழை நிலைமையை கருத்திற்கொண்டு நீர் மின்னுற்பத்தி தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும் என தேசிய முறைமைகள் செயற்பாட்டாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் மேலும், எதிர்வரும் அக்டோபர் மாதம் வரை நீர் மின்னுற்பத்திக்கான போதுமான நீர் கொள்ளளவு காணப்படுகிறது.
நீர் மின்னுற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 67 சதவீதமாக காணப்படுகிறது.
எதிர்கால மழை நிலைமையை கருத்திற்கொண்டு நீர் மின்னுற்பத்தி தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு
இதேவேளை நாடளாவிய ரீதியிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 50 சதவீதமாக காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், நீர்ப்பாசனத் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் நீர்த்தேக்கங்களில் சேமிக்கக்கூடிய அளவு தற்போது 35 வீதமாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் H.M.P.S.D ஹேரத் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7