திருகோணமலையில் 22,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை ஆரம்பம்
பெரும்போக நெற்செய்கையை ஆரம்பிக்கும் முகமாக, கந்தளாய் குளத்தின் பிரதான மதகுகளில் இருந்து விவசாய நிலங்களுக்கான நீர் இன்று (24) காலை சுப வேளையில் திறந்துவிடப்பட்டது.
கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தின் கீழ் உள்ள சுமார் 22,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்வதற்காகவே இந்த முதல் நீர் திறக்கப்பட்டுள்ளது.
நெற்செய்கை ஆரம்பம்
நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியல் அலுவலக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் விவசாயத் தலைவர்கள் ஆகியோர் இணைந்து மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பிரதான மதகை இயக்கி நீரை வெளியேற்றினர்.

குறித்த நேரத்தில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீரின் மூலம் கந்தளாய் வான் எல, அக்போபுர, ஜெயந்திபுர, தம்பலகாமம் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நெல் வயல்களுக்குத் தொடர்ச்சியாக நீர் வழங்கப்படும்.
இந்த பெரும்போகச் விவசாயத்தின் மூலம் சுமார் பன்னிரண்டாயிரம் (12,000) விவசாயக் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுகின்றன நீர்ப்பாசன மற்றும் விவசாயத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், நீர் முகாமைத்துவம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, அனைத்து விவசாய நிலங்களுக்கும் சமமான நீர் விநியோகம் நடைபெறும் என தெரிவிக்கின்றனர்.
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan