நாட்டின் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு
நீர்வெட்டு தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (20.07.2023) 9 மணிநேர நீர்வெட்டு ஏற்படவுள்ளதாக சபை அறிவித்துள்ளது.
மின்சார சபையின் அவசர திருத்த வேலைகள் காரணமாக, கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 9 மணித்தியால நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

9 மணித்தியால நீர்வெட்டு
இதன்படி. கஹவத்த, குருகொட, புளுகஹதென்ன, ஹிராகடுவ, கஹல்ல, தெலும்பு கஹவத்த, நுகவெல, பலனகல, அஸ்கிரிய, வேகிரிய, புதிய பல்லேமுல்ல, பழைய பல்லேமுல்ல, யட்டிஹலகல, கொண்டதெனிய, ரஜபிகில்ல, மெதவல, ஹுலுகம்மன ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan