நாட்டில் நீர்வெட்டு தொடர்பில் வெளிவந்துள்ள அறிவிப்பு
நாட்டில் நிலவும் வரட்சி நிலைக்கு மத்தியிலும் தற்போதைக்கு புதிய நீர்வெட்டுக்களை நடைமுறைப்படுத்தும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள நீர் வளங்கள் மிகவும் வினைத்திறனான முறையில் முகாமைத்துவம் செய்யப்பட்டு வருகிறது. கண்டி மற்றும் குண்டசாலை ஆகிய பகுதிகளில் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நிலவிய 10 நாள் நீர் விநியோகத் தடை தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது.
தொழிநுட்ப கோளாறு
பலகொல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நீர் இறைக்கும் பம்பிகளில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறுகளே இந்த தடைக்குக் காரணமாக அமைந்தன. டிட்வா சூறாவளியின் தாக்கத்தைத் தொடர்ந்து, நீர் சேகரிக்கும் பகுதிகளில் அதிகளவிலான சேறு மற்றும் வண்டல் மண் படிந்ததால், சுத்திகரிப்பு நிலையத்தின் வடிகட்டுதல் செயற்பாடுகள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டிருந்தன.
கடும் வெப்பம் காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ள போதிலும், தற்காலிக அணைக்கட்டு ஒன்றை அமைத்து நீர் சுத்திகரிப்பு முறைமையை அதிகாரிகள் மீண்டும் நிலைநாட்டியுள்ளனர்.

குடிநீர் விநியோகம்
நீர் விநியோகம் இன்னும் முழுமைபெறாத பகுதிகளுக்கு கொள்கலன் ஊர்திகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 'ஹரகம' தடாகத்திலிருந்து நேரடியாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய்கள் மூலம் நீரைத் திருப்பிவிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றுள்ளார்.
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
மயிலுக்கு ஆதரவாக நிற்கும் குடும்பம், ஆனால் சரவணன் செய்த ஷாக்கிங் விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam