நாட்டின் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு
நீர் கோபுரங்கள் மற்றும் விநியோக அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக கட்டான நீர் வழங்கல் அமைப்பின் கட்டான வடக்கு பகுதியில் 16 மணி நேர நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள்
இதற்கமைய, நாளை (19.03.2025) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கட்டான வடக்கு பிராந்தியத்தின் பல பகுதிகளில் 16 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும்.
அந்தவகையில், பம்புகுளிய, முருதான, கட்டான வடக்கு, கட்டான மேற்கு, கட்டான கிழக்கு, உடங்காவ, மனச்சேரிய, தோப்புவ, களுவாரிப்புவ மேற்கு, இஹல கடவல, பஹல கடவல, வெலிஹேன வடக்கு, வெலிஹேன தெற்கு, அடிக்கண்டி, எட்கல, எட்கல தெற்கு, மஹ எட்கல மற்றும் களுவாரிப்புவ கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |