கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
எதிர்வரும் 4ஆம் திகதி 2 மணிமுதல் 5ஆம் திகதி பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியினுள் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 1,2,3,4,7,8,9,10 மற்றும் 11 வரையான பகுதிகளுக்கும், கடுவலை நகரம் அதனை அண்டிய பகுதிகளுக்கும் நீர்விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்விநியோகம் தடை
இந்நிலையில், கொலன்னாவை நகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களுக்கும், வெல்லப்பிட்டி, கொட்டிகாவத்தை பகுதிகளுக்கும் நீர்விநியோகம் தடைப்படுமென நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மாளிகாகந்த நீரேந்து நிலையத்திற்கு நீரை விநியோகிக்கும் குழாய் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகளால் இவ்வாறு நீர்விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.