கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
நாட்டில் சில பகுதிகளில் நாளை 7 1/2 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்று (19) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகம் தடை
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது.

இந்த நீர் விநியோக தடையானது நாளை சனிக்கிழமை (20) காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை 7 1/2 மணி நேரம் நீர் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீர் விநியோக தடையானது கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகம் தடைப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் வெளியிட்டிருப்பதுடன், தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan