கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 09 மணிநேரம் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
நீர்வெட்டு
இந்த நீர்வெட்டு எதிர்வரும் சனிக்கிழமை (06) காலை 10.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரை, பத்தரமுல்ல, பெலவத்த, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மெதிவெல, நுகெகொடை, நாவல, மஹரகம, பொரலஸ்கமுவ, இரத்மலானை,தெஹிவளை, மொரட்டுவை ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri