நீர்க்கட்டணத்தில் திருத்தம்! வழங்கப்பட்டது அனுமதி
நீர் மற்றும் வடிகாலமைப்புக் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிதி ஆற்றல்கள் மற்றும் நிலைபேற்றுத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.
பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதார அணுகல்களுக்கான சந்தர்ப்பங்களை விரிவுபடுத்தல், சேவைகளின் தரப்பண்புகளை அதிகரித்தல் மற்றும் நிலைபேறான நீர்வளங்களின் நடைமுறைகளை நடைமுறைப்படுத்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு இயலுமாகும் வகையில் இந்த உறுதிப்படுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட யோசனை
அதற்கமைய நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனையை கருத்தில் கொண்டு குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், வணக்கத்தலங்கள் மற்றும் பொது நீர் விநியோகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்புக்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் நீர் மற்றும் வடிகாலமைப்புக் கட்டணங்களைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan