நீர் மற்றும் மின்சார கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்க கோரிக்கை- செய்தி தொகுப்பு (video)
மின்சாரக் கட்டணம் பெருமளவு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் மாற்று வழியை வழங்க வேண்டும் அல்லது பொது மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
குறைந்தளவு வருமானம் பெறுபவர்கள் தொடர்ச்சியான விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வு மக்களுக்கு மேலும் ஒரு பாதிப்பாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
உற்பத்தி மற்றும் செயற்பாட்டுச் செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை எதிர்நோக்குவதாகக் கூறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri