மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம்! சபையில் அம்பலமான விடயம்
பேருவளை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் உருவாகியுள்ள குப்பை மேட்டினால் மீத்தொட்டையில் நடந்ததை போன்று மக்கள் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், ''பேருவளை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கழிவுகளை அகற்றும் முறையினால் பாரிய குப்பை மேடு உருவாகியுள்ளது.
நிலையான தீர்வு
இந்த குப்பை மேட்டினால் மீத்தொட்டையில் நடந்ததை போன்று உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும்.
பேருவளை, களுத்துறை பிரதேச செயலகப் பிரிவுகளின் சுகாதாரத் துறையின் பொறுப்பு மாகாண சபைக்கு இல்லை, நேரடியாக மத்திய அரசாங்கத்திற்கே உள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட மக்கள் வாழும் பிரதேசங்களிலேயே இந்த கழிவுகள் கொட்டப்படுகின்றன.
பேருவளை குப்பை மேட்டை அகற்றி, கழிவுகளை அகற்றுவதற்கு நிலையான தீர்வை வழங்க சுகாதார, சுற்றாடல், உள்ளூராட்சி அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரையும் அழைக்க வேண்டும்.'' என தெரிவித்துள்ளார்.