துறைமுக சிற்றுண்டிச்சாலையில் இடம்பெறும் பாரியளவிலான வீண்விரயம் அம்பலம்
கொழும்புத் துறைமுக சிற்றுண்டிச்சாலையில் நாளாந்தம் பாரியளவிலான எரிபொருள் வீண்விரயம் நடைபெறுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் கண்டறியப்பட்டுள்ளது.
துறைமுகத்தை பார்வையிட்ட அமைச்சர்
கொழும்புத்துறைமுகத்தின் சிற்றுண்டிச்சாலை நேற்று துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் திடீரென்று பார்வையிடப்பட்டுள்ளது.

அதன்போது நாளாந்த உணவில் மரமுந்திரிகை சேர்த்துக் கொள்ளப்படுவதற்காக பாரிய தொகையொன்று தினமும் செலவிடப்படுவதை அவரால் கண்டறியப்பட்டுள்ளது.
சிற்றுண்டிச்சாலையில் உணவு தயாரிக்க செலவிடப்படும் தொகையில் சரி பாதி அளவில் மரமுந்திரிகை விதைகளுக்கு செலவிடப்படுவதாக தெரியவந்ததையடுத்து மரமுந்திரிகைக்குப் பதில் வேறொரு பண்டத்தை உணவில் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வீணடிக்கப்படும் எரிபொருள்
அத்துடன் சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட துறைமுக சிற்றுண்டிச்சாலையில் மிகவும் பழைய பொறிமுறையில் உணவு தயாரிக்கப்படுவதன் காரணமாக பாரியளவான எரிவாயு நாளாந்தம் வீணடிக்கப்படுவதையும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிற்றுண்டிச்சாலையை நவீனமயப்படுத்தவும், எரிவாயு பாவனையை மட்டுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri