கொத்மலையில் குளவி தாக்குதல்: 7 பொலிஸ் அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி
கொத்மலை - ரம்பொட வெதமுல்ல தோட்டப் பகுதியில் அமைந்திருந்த சட்டவிரோத கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைப்பதற்காக சென்ற 7 பொலிஸ் அதிகாரிகள் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (01.04.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆபத்தான நிலையில் அதிகாரிகள்
ரம்பொட - வெதமுல்ல தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.
அப்போது திடீரென குளவி கூட்டம் தாக்கியதால், சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான அதிகாரிகளில் 2 பேர் கொத்மலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 5 பேர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

