தாஜுதீனை கொலை செய்தவர்கள் ஜனாதிபதியின் நிழலில்.. சபையில் பரபரப்பு குற்றச்சாட்டு
வசீம் தாஜுதீன் கொலையை விபத்தாக மாற்றுவதற்கு செயற்பட்ட சிலர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நிழலில் மறைந்திருப்பதாக முஜுபுர் ரஹ்மான் எம்.பி குற்றஞ்சாட்டியள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(18.11.2025) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம்
வசீம் தாஜுதீன் கொலை சமயத்தில் நாரேஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பகுதி பொறுப்பதிகாரியாக இருந்த சுமித் பெரேரா, நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில்,

அநுர சேனாநாயக்கவுடன் கொழும்பு குற்றவியல் பகுதியின் பொறுப்பதிகாரியாக இருந்த ரனவீரவும் (DIG) சேர்ந்தே இந்த கொலையை விபத்தாக மாற்ற சாட்சியங்களை சேகரித்தனர்.
மேலும் அநுர சேனாநாயக்கவின் ஆலோசனைக்கு அமையவே இந்த கொலையை விபத்தாக மாற்றுவதற்கான 'பி'அறிக்கையை ரனவீர (DIG) தயாரித்தார் என்று சுமித் பெரேரா, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வகிக்கும் பதவிகள்
இதெல்லாம் ஜனாதிபதி அநுரவுக்கு தெரியாதா?ரனவீர (DIG) இன்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் ஆலோசகர் பதிவியில் இருக்கிறார்.மேலும் அநுர சேனாநாயக்க ஜனாதிபதியின் டிஜிட்டல் அமைச்சின் ஆலோசகராக இருக்கின்றார்.
இவர்களை இப்பதவிகளில் வைத்து கொண்டு எவ்வாறு தாஜுனின் கொலையின் உண்மையான குற்றவாளிகளை பிடிக்க முடியும்.தேர்தல் மேடைகளில் இவ்வாறான பல கொலைகளுக்கு நீதியை பெற்றுத் தருவதாக தெரிவித்திருந்தார் ஜனாதிபதி ஆனால் எதுவும் நடக்கவில்லை.
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam