வர்த்தக மத்திய நிலையங்களை தனியார் மயப்படுத்த நடவடிக்கை
இலங்கையிலுள்ள வர்த்தக மத்திய நிலையங்களை அரசாங்கம் தனியார் மயமாக்குவதற்கு முயற்சித்து அதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவை பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.
அது மட்டுமல்ல, கூட்டுறவுத்துறையை கம்பனிகளாக மாற்றியமைக்க செயற்றிட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாகவும் கூட்டுறவை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் செற்பாட்டாளர் ஹர்சர குணரத்தின அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த அமைப்பு இன்று(16.08.2025) நடத்திய ஊடவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,
“வர்த்தக மத்திய நிலையங்களை அரசாங்கத்தால் கொண்டு நடத்த முடியாதுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவும் தெரிவித்துள்ளார்.
அரச சொத்துக்கள்
அது மட்டுமல்ல. கூட்டுறவுதுறையின் அடிப்படை நோக்கங்கள் மாற்றப்பட்டு கம்பனிகளாக மாற்றியமைப்பதற்கான திட்டத்தின் ஒரு கட்டமாக அரசாங்கத்தில் பல நிறுவனங்களை கூட்டுறவுத்துறையுடன் இணைக்கவுள்ளனர்.
கிராமிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக புராதன காலம் தொட்டு நடைமுறையில் இருப்பதே கூட்டுறவுத்துறையாகும்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரச சொத்துக்களை விற்க மாட்டோம் என்றனர். ஆனால், அவர்களின் வாக்குறுதிகளுக்கு மாற்றமாகவே செற்படுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
