மத்தள விமான நிலையத்திற்கு துப்பாக்கி கொண்டு செல்லப்பட்டதா?
மத்தள விமான நிலையத்திற்குள் T-56 ரக துப்பாக்கியை எடுத்துச் சென்றதாக செய்தி ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இந்த செய்தி தொடர்பில் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் பி.ஏ.ஜயகாந்த விளக்கமளிக்கிறார்.
மத்தள விமான நிலையத்திற்குள் எந்த முறையிலும் T-56 துப்பாக்கியை எந்த அதிகாரியும் கொண்டு செல்லவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது பொய்யான தகவல் என அவர் குறிப்பிட்டுள்ளார். உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல் சில பாதுகாப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதென கூறப்படும் விடயம் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பு கூறுவது தான். அதற்கமைய விமான நிலையத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என தன்னாலேயே சோதனையிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என விமான சேவைகள் அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் பி.ஏ.ஜயகாந்த மேலும் தெரிவித்துள்ளார்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri