காணாமல்போன சிறுமி பலி கொடுக்கப்பட்டாரா..! புத்தளத்தில் மக்கள் குழம்பியதால் பதற்றம் (Video)
புத்தளம் - மதுரங்குளிய பிரதேசத்தில் சிறுமியொருவர் பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மக்கள் குழம்பியதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (05.06.2023) பதிவாகியிருந்ததாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
புதையல் இருப்பதாக கூறப்படும் காணிப்பகுதியை பிரதேசவாசிகள் அவதானித்த போது, காணியில் வெட்டப்பட்ட குழியில் சிறுமியொருவருடையது என கருதக்கூடிய சில ஆடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புத்தளம், மதுரங்குளி கின்னவத்தை பிரதேசத்தில் உள்ள தனியார் காணி ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காணாமல்போன சிறுமி
அண்மைய நாட்களில் இந்த காணிக்கு அருகில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணொருவரும், சிறுமியொருவரும் காணாமல் போயுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையிலேயே குறித்த சிறுமி பலி கொடுக்கப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதுடன், இதனிடையே, புதையல் தோண்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குழியில் நிரம்பியிருந்த நீரை அகற்றி அப்பகுதியில் தேடுதல் நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடியோ - அஸார்

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
