யாழில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளருக்கு பிடியாணை
குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகனுக்கு யாழ். நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்.
இதன்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டதற்காகவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
இது குறித்து மு.கோமகன் தெரிவிக்கையில், எனக்கு வழக்கிற்கு வருமாறு இதுவரை எந்தவிதமான அழைப்பாணையும் வழங்கப்படவில்லை.
ஆனால் எனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், வழக்தின் போது எனது பெயர் அழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆகையால் எனக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. எனவே நான் சட்டத்தரணியூடாக மன்றில் முன்னிலையாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
