புத்தாண்டு கொண்டாடும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பட்டாசு விபத்துகளை தடுப்பது குறித்து அவதானமாக செயற்பட வேண்டுமென சுகாதார அமைச்சின் விபத்துத் தடுப்புப் பிரிவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தமது கண்காணிப்பு இன்றி சிறுவர்களைப் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொறுப்புடன் செயற்பட வேண்டும்
அத்துடன், விபத்துக்கள் இல்லாத, பாதுகாப்பான புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அந்த பிரிவின் விசேட மருத்துவர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேவையற்ற காயங்கள் மற்றும் சொத்துச் சேதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பட்டாசு கொளுத்தும் போது போதிய இடைவெளியைப் பேண வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.